கிறிஸ்துமசும் இஸ்லாமும்!

பின்னூட்டமொன்றை இடுக

ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர். பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப் பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை! மேலும்

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

பின்னூட்டமொன்றை இடுக

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi

இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது ‘சாமிரி’ என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் சகோதரரும் தீர்க்கதரிசியும் ஆகிய ‘ஆரோன்’ அவர்கள் வணங்குவதற்காக சிலையைச் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது. இதில் எது சரி? இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
 
இறைதூதர்கள் எனப்படுவோர் மனித சமுதாயத்தை நல்வழியின் பால் அழைப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்ட்ட சத்திய சீலர்கள். மக்களை நல்வழிப்படுத்த எல்லா வகையிலும் பிறருக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். அறவழியில் தமக்கு ஏற்படும் இன்னல்களை அவர்கள் சகித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மகான்களையே இறைவன் தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லுபதேசங்களை உள்ளடக்கிய வேதங்களையும் வழங்குகிறான். இந்த அடிப்படையைத் தான் திருக்குர்ஆனும் பைபிளும் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. மேலும்

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

2 பின்னூட்டங்கள்

திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)  

” அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)
 
 
   சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?  
 
கிறிஸ்தவர்களின் விமர்சனம்:   //மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான் சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.//

குர்ஆன் மீது இப்படி ஒரு விமர்சனத்தை கிறிஸ்தவர் ஒருவர் தனது இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் பின்பற்றி சில கிறிஸ்தவர்களும் இதனைப் பரப்பி வருகின்றனர்.திருக்குர்ஆனில் சரித்திரத் தவறா? என்ற தொடரின் இரண்டாம் பகுதியில் இது பற்றிப் பார்ப்போம். மேலும்

சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை!

1 பின்னூட்டம்

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் “முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்” (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141) மேலும்

திருக்குர்ஆனில் சரித்திர தவறா?

பின்னூட்டமொன்றை இடுக

Quran-Bgதிருக்குர்ஆனில் சரித்திர தவறா?

பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில்  திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும். மேலும்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (6)

பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!

இனவெறியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற புரோகித வர்க்கம் தம் ஈனச் செயல்களை நியாயப் படுத்த அவற்றை வேத உபதேசங்களாக்கி மக்கள் மன்றத்தில் வைத்தன. இவர்களின் வெறிச் செயலை படம் பிடித்துக் காட்டும் இன்னொரு சம்பவம் தான் அன்றைய பாபிலோன் மக்கள் மீது கொண்ட வெறுப்பில் அவர்களின் குழந்தைகளைக் கூட கல்லாலடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம். சங்கீத புஸ்தகம் கூறும் உபதேசம் பாருங்கள். மேலும்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (5)

பின்னூட்டமொன்றை இடுக

ஆடு, மாடு, ஒட்டகம், கழுதையைக் கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொன்றொழிக்கக் கட்டளையிடும் பைபிள், பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்லவா?. இதன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் “ஜனநாயக அமைதி தூதர்களாக” வேடமிட்டு வலம் வரும் மேற்கத்திய நாகரீகவாதிகள் அல்லவோ பயங்கரவாதத்தின் ஒட்டு மொத்த திரு உருவங்கள்?!
அன்றைய புரோகிதர்கள் தாங்கள் செய்த அட்டூளியங்களுக்கு மதச் சாயம் பூசினர். தங்கள் செயல்களைக் கடவுளின் பெயரால் நியாயப் படுத்தினர். புரோகிதக் கருத்துக்கள் வேதநூல்களாக மதிக்கப்பட்டன. சிலுவை யுத்தங்கள் முதல் இன்றைய ஈராக், ஃபலஸ்தீன் அடக்கு முறைகள் வரை வேதங்களின் பெயரால் நியாயம் கற்பிக்கப்படுகின்றன. மக்களிடம் தங்கள் மார்க்கம் அன்பைப் போதிக்கிறது என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்களாகட்டும், அல்லது கடவுளின் பிள்ளைகள் என்று தங்களை இனம் காட்டும் யூதர்களாகட்டும், இவர்கள் நடத்திய இனப படுகொலைகள் வரலாற்றின் வடுக்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கி்ன்றன. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மதவாதிகள் தங்களிடம் உள்ள வேதம் கூறும் பயங்கரவாதக் கருத்துக்களை மக்களிடம் மறைத்து விட்டு அதன் முலாம் பூசிய பகுதியை மட்டும் வைத்து பிரச்சாரம் நடத்தி மத வியாபாரம் நடத்தி வருகின்றனர். இவர்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டும் பொருட்டு பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் நான்கு தொடர்கள் வெளியிட்டிருக்கிறோம். தொடர்ந்து பைபிளின் பயங்கரவாதக் கருத்துக்களைப் பாருங்கள்:

ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசம் இன்றி உயிருள்ள அனைவரும் கொலை செய்யப்பட வேண்டும்!

இணைச்சட்டம் (உபாகமம்) 20 ஆம் அத்தியாயம் 16 ஆம் வசனம் கூறுகிறது.

”ஆனால் இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே”

பாருங்கள்- உயிர் வாழும் ஒன்றையும் விடக் கூடாதாம்! அதாவது குழந்தைகளாகட்டும் பெண்களாகட்டும், முதியவர்களாகட்டும் ஏன் விலங்கினங்களாகட்டும் ஒன்றையும் உயிரோடு விட்டு வைக்காமல் கொல்ல வேண்டும். இது கடவுளின் கட்டளையாம்(?!) கிறிஸ்தவர்களே! தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? பள்ளிக் கூடங்களைக் குறிவைத்து குழந்தைகளை மிகக் கொடூரமான முறையில் இஸ்ரேல் கொலை செய்தது தம்மிடம் தல்மூது என்ற பெயரில் இருக்கும் பைபிளின் பழைய ஏற்பாடு செய்த இவ்வுபதேசத்தின் அடிப்படையில் தானே?

இன்னும் இதே பகுதியின் 20 ஆம் வசனம் கூறுவதைப் பாருங்கள்

”உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும் வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்”

கர்த்தரின் கட்டளைப்படி பெண்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இது கர்த்தரின் கட்டளையாம்! ஆடு மாடுகளும் விட்டு வைக்கப்படவில்லை!

சாமுவேல் என்பவர் இறைவனி்ன் கட்டளையாகக் கூறுகிறார்

ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடும் சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தொலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்” (1 சாமுவேல் 15: 3,4)

இந்த அக்கிரமத்தைச் செய்ய படைகளின் கடவுள் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்! தாங்கள் செய்யும் அக்கிரமத்துக்கு நியாயம் கற்பிக்க அக்கிரமத்தை இறைவன் மீது சாட்டும் புரோகிதர்களின் இழி செயலை இது காட்டவில்லையா?

ஆடு, மாடு, ஒட்டகம், கழுதையைக் கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொன்றொழிக்கக் கட்டளையிடும் பைபிள், பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்லவா?. இதன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் “ஜனநாயக அமைதி தூதர்களாக” வேடமிட்டு வலம் வரும் மேற்கத்திய நாகரீகவாதிகள் அல்லவோ பயங்கரவாதத்தின் ஒட்டு மொத்த திரு உருவங்கள்?!

பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் இன்னும் தோண்டப்படும்!

Older Entries